தென்காசியில் முன்னாள் ராணுவ வீரர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு முன்னாள் ராணுவத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம், தென்காசி புதிய பேருந்து நிலையம் எதிரே கிருஷ்ணகிரி ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டி எம்ஜிஆர் நகரை சேர்ந்த ராணுவ வீரர்களான பிரபாகரன் (31). மற்றும் அவரது சகோதரர் பிரபு (28). என்ற இரண்டு நபர்களையும் அதே பகுதியை சேர்ந்த திமுக கவுன்சிலர் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து தாக்கியதில் பிரபு என்ற ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தற்போது தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், ராணுவ வீரருக்கு திமுக ஆட்சியில் இந்த நிலைமையா? என பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், இன்று தென்காசி மாவட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்களும், பாஜகவினரும் ஒன்றிணைந்து திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய படி தென்காசி புதிய பேருந்து நிலையம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், ராணுவ வீரர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாத வகையில் போலீசார் தங்களது நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
தமிழக அரசை கண்டித்து முன்னாள் ராணுவ வீரர்கள் நடத்தி இந்த திடீர் போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu