சிற்றாறு தூய்மையை வலியுறுத்தி, விழிப்புணர்வு மாரத்தான்
தென்காசியில் கலைஞர் நூற்றாண்டு மற்றும் சிற்றாற்றின் தூய்மையை வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாரத்தான் போட்டியை நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.
HIGHLIGHTS

மாரத்தான் போட்டியை நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடங்கி தென்காசி நகர் பகுதியில் வழியாகச் சென்று கடலில் கலக்கும் சிற்றாறு பல்வேறு வகைகளில் தூய்மை இழந்து பாழ்பட்டு வருகின்றது. அதனை சீர் செய்யும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்
தென்காசியில் கலைஞர் நூற்றாண்டு மற்றும் சிற்றாற்றின் தூய்மையை வலியுறுத்தியும் சிறுவர்கள், பெரியவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாரத்தான் போட்டியை தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர் தொடங்கி வைத்தார் தென்காசியில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டும், தென்காசி சிற்றாற்றின் தூய்மையை வலியுறுத்தியும் சிறுவர்கள், பெரியவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியானது இந்த ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பாக தொடங்கி ஆயிரப்பேரி தேவாலயம் வரை என சுமார் 6 கிலோமீட்டர் தூரம் வரையில் நடைபெற்றது.
மாரத்தான் போட்டியை நகர் மன்ற தலைவர் சாதிர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாரத்தான் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு கலைஞரின் நூற்றாண்டை நினைவு கூறும் வகையில் பேனா வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக தங்க நாணயமும், இரண்டாம் இடத்திற்கு 2000 ரூபாயும், மூன்றாம் பரிசு ரூபாய் ஆயிரமும் வழங்கப்பட்டது. மேலும் வெற்றி பெற்ற சிறுவர்களை நகர் மன்ற தலைவர் தனது தோளில் தூக்கி உற்சாகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் சிறியவர்கள், பெரியவர்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.