தென்காசி மாவட்ட வாக்காளர் வரைவு பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்

தென்காசி மாவட்ட வாக்காளர் வரைவு பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்
X

வாக்காளர் வரைவு பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட போது எடுத்த படம்.

தென்காசியில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் 18வயது பூர்த்தியானவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் விதமாக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் தெரிவித்தார்.

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, ஆண்டுதோறும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடைபெறும். இதைத் தொடர்ந்து, ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்த பணி இன்று தொடங்குகிறது.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணியின் தொடக்கமாக, தற்போதைய நிலவரப்படி உள்ள வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

அதன்படி தென்காசி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் துரை. ரவிச்சந்திரன் வெளியிட்டார்.

தென்காசி மாவட்டத்தை பொருத்தவரை மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 3ஆயிரத்து 62 நபர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளனர். மூன்றாம் பாலினத்தார் 155 நபர்கள் உள்ளனர்.

இதில் தொகுதி வாரியாக

  • தென்காசி சட்டமன்ற தொகுதியில் 2லட்சத்து 88 ஆயிரத்து 509 நபர்களும்,
  • ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் 2 இலட்சத்து 55ஆயிரத்து 269 நபர்களும்,
  • கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் 2 இலட்சத்து 75 ஆயிரத்து 895 நபர்களும்,
  • வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 40 ஆயிரத்து 839 நபர்களும்
  • சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் 2,42,550 நபர்கள் உள்ளனர்.

மாவட்டத்தில் மறுசீரமைப்புக்கு பின்னர் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1517 உள்ளது.

மேலும் மாவட்டத்தில் வாக்காளர்களின் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டவைகளுக்கு நான்கு நாட்கள் முகாம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தனர். குறிப்பாக 18 வயது பூர்த்தியானவர்களை சேர்க்கும் விதமாக அனைத்து கல்லூரிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!