தென்காசியில் விநாயகர் சிலை வைக்க அனுமதிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

தென்காசியில் விநாயகர் சிலை வைக்க அனுமதிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
X

தென்காசியில் விநாயகர் சிலை வைக்க வேண்டி நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

தென்காசியில் விநாயகர் சிலை வைக்க அனுமதிக்கக்கோரி காசி விஸ்வநாதர் கோவில் முன்பு இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசி நகர இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைக்க அனுமதிக்கக்கோரி அருள்மிகு காசி விஸ்வநாதர் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட தலைவர் ஆறுமுகம் சாமி தலைமை தாங்கினார். தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, தென்காசி நகர தலைவர் நாராயணன், பா.ஜ.க நகர பொதுச் செயலாளர் ராஜ்குமார், பா.ஜ.க முன்னாள் கவுன்சிலர் சங்கர சுப்பிரமணியன், விஷ்வ இந்து பரிஷசத் அமைப்பின் நகர தலைவர் சுப்பிரமணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
வளர்ந்து வரும் மருத்துவத்தில் AI யின் புதிய வெற்றிகள்!