சுரண்டையில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

சுரண்டையில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
X

சுரண்டை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்.

சுரண்டை தபால் நிலையம் முன்பு மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அமலாக்கத்துறை ஹரால்டு வழக்கு சம்பந்தமாக ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பி 5 நாளாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் சுரண்டை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு நகரத் தலைவர் ஜெயபால் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் அமலாக்கத்துறை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சுரண்டை நகர்மன்ற தலைவர் வள்ளி முருகன் , மாவட்ட பொருளாளர் முரளிராஜா, மாநில பேச்சாளர் பால்துரை உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!