கனிம வளக் கடத்தலைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

கனிம வளக் கடத்தலைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
X

 கனிம வள கடலை கண்டித்து ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 

கனிம வளம் கடத்தலை கண்டித்து - தென்காசி யில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கனிம வளம் கடத்தலை கண்டித்து - தென்காசியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரளாவில் உள்ள மருத்துவக் கழிவு மற்றும் இறைச்சி கழிவுகள், இரப்பர் போன்ற கழிவுகளை அங்கிருந்து தமிழகத்திற்கு கொண்டு வந்து கொட்டுவது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் இருந்து கனிம வளம் கேரளாவிற்கு கடத்தப்படுவதை கண்டித்தும், அங்கிருந்து மருத்துவம் மற்றும் இறைச்சிக் கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவதை கண்டித்தும் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் காளியப்பன் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க முத்துசாமி, தாலுகா தலைவர் கணேசன், சம்சுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செயலாளர் பாஸ்கரன், மாநில செயற்குழு உறுப்பினர் வீர. பாலன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

இதனைத் தொடர்ந்து மாநில செயலாளர் பாஸ்கரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்திலிருந்து மணல், கனிம வளங்கள் உட்பட தாது பொருட்கள் கேரளாவிற்கு கடத்தப்படுகிறது.அதனை துபாயிக்கு ஏற்றுமதி செய்கின்றனர். அதன் மூலம்ஆபத்து விளைவிக்கும் அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுகிறது. இது அழிவு பாதை ஆக்கப்பூர்வமான தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும்.அதேபோல் கேரளாவில் இருந்து ஆடு,மாடு, கோழி, மருந்து உட்பட கழிவுகள் தமிழகத்திற்கு அனுப்பப்படுகின்றது. அதனை கேரளா அரசு மனிதாபிமான அடிப்படையில் நிறுத்த வேண்டும். இதனை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
ai and future of education