தென்காசியில் மழையால் சேதமடைந்த வீடுகள்: திமுக சார்பில் நிதி உதவி

தென்காசியில் மழையால் சேதமடைந்த வீடுகள்: திமுக சார்பில் நிதி உதவி
X

ஆசாத் நகரில் மழையால் வீடு இழந்த சுப்பிரமணியன் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கிய திமுகவினர்.

தென்காசியில், மழையால் சேதமடைந்த வீடுகளின் வசிப்போருக்கு, திமுக சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.

அண்மையில் பெய்த மழையால் தென்காசி மாவட்டத்தில் பாதிப்புகள் ஏற்பட்டன. பல்வேறு தரப்பினரும், மழை பாதித்த மக்களுக்கு உதவி வருகின்றனர். தென்காசி நகரம் ஆசாத் நகரில், மழையால் வீடு இழந்து பாதிக்கப்பட்டுள்ள சுப்பிரமணியன் என்பவருக்கு, மாவட்ட திமுக சார்பில் 5 ஆயிரமும், நகர திமுக சார்பில் அரிசி காய்கறிகள் போன்ற உணவு பொருட்களும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தென்காசி நகர திமுக செயலாளர் சாதிர், இளைஞரணி சரவணன், தங்கப்பாண்டியன், வார்டு செயலாளர் மூக்கையா, மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!