தென்காசி-வெளி மாவட்டத்தில் இருந்து வருபவர்களை கண்காணிக்க சோதனைச்சாவடிகள்

தென்காசி-வெளி மாவட்டத்தில் இருந்து வருபவர்களை கண்காணிக்க சோதனைச்சாவடிகள்
X

முழு ஊரடங்கு -இடம் தென்காசி மாவட்டம்

சிகிச்சைக்காக தவிப்பவர்கள் காவல் நிலைய வாகனங்களை பயன்படுத்த ஏற்பாடுகள்- தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தகவல்.

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் நகராட்சிகள் மூலமாக நடமாடும் காய்கறி வாகனங்கள் இயக்கப்பட்டுள்ளது. நகரில் பல்வேறு பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர் இந்த பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தென்காசி மாவட்டத்திற்கு, வெளி மாவட்டத்தில் இருந்து வருபவர்களை கண்காணிக்க ஏற்கனவே 9 சோதனைச்சாவடிகள் உள்ளது. தற்போது கூடுதலாக 24 சோதனைச்சாவடிகள் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு காவல் நிலைய எல்கையில் இருந்து வேறு ஒரு காவல் நிலைய எல்கைக்கு செல்ல வேண்டும் என்றால் உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். இதில் பத்திரிக்கையாளர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோருக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு காவல் நிலைய எல்லை மற்றும் மற்றொரு காவல் நிலைய எல்லைக்கு தேவை இல்லாமல் வாகனங்களில் சுற்றித் திரிந்தால் இதுவரை அவர்கள் மீது 200 ரூபாய் 500 ரூபாய் அபதாரம் மட்டும் விதிக்கப்பட்டிருந்த நிலையில் இனி ஊரடங்கு காலங்களில் எந்த வித காரணங்கள் இல்லாமல் காவல் நிலைய எல்கை பகுதிகளில் வெளியில் சுற்றித் திரிந்தால் அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்றார்.

பொது மக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரானா பரவுவதை கட்டுப்படுத்த முடியும். தேவையான காரணங்களுக்கு வருபவர்கள் தீவிர கண்காணிப்புக்கு பின்னர் அனுமதிக்கப்படுவர். அவசர காலங்களில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வாகன வசதிகள் இன்றி தவிப்பவர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை தொடர்பு கொண்டால் காவல்துறை வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags

Next Story
ai tools for education