குற்றால அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

குற்றால அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
X

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், பாவூர்சத்திரம், ஆலங்குளம், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று காலை வெள்ளப்பெருக்கு குறைந்தது. தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். கடந்த சில நாட்களாக தண்ணீர் குறைந்து வறண்டு காணப்பட்ட குற்றாலத்தில் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து செல்கின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!