குற்றாலத்தில் கொரோனா விதிமுறைகள் தீவிரம்: மாவட்ட நிர்வாகம் அதிரடி

குற்றாலத்தில் கொரோனா விதிமுறைகள் தீவிரம்: மாவட்ட நிர்வாகம் அதிரடி

மெயின் அருவி.

குற்றாலத்தில் கொரோனா விதிமுறைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 500 அபராதம் என்ன மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.

அதன்படி இன்று குற்றாலத்தில் சுகாதாரத் துறை சார்பில் பொது இடங்களில் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து முகக் கவசம் அணியாமல் வந்த நபர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags

Read MoreRead Less
Next Story