தென்காசியில் பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கி காெராேனா விழிப்புணர்வு

தென்காசியில் பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கி காெராேனா விழிப்புணர்வு
X

தென்காசியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் முக கவசம் அணியாத பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கி அறிவுரை வழங்கினார்.

மாநில எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேட்டி

மாநில எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேட்டி.

தமிழக அரசு கொரோணா மற்றும் ஒமிக்ரான் பரவல் தொடர்பாக வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் முக கவசம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்ட காவல் துறை சார்பில் காசி விஸ்வநாதர் ஆலயம் முன்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் முக கவசம் அணியாத பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கி அறிவுரை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் முக கவசம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

வணிக வளாகங்கள், பேரூந்து நிலையங்கள் போன்ற இடங்களில் கூட்டம் அதிகம் கூடாமல் இருக்க கண்காணிக்கப்பட்டு வருகிறது. கூட்டம் கூடும் இடங்களில் அதிகமான அபராதம் விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநில எல்லைகள் தீவிர கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Tags

Next Story
ai as the future