தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் விநாயகர் சிலை பிரதிஷ்டை

தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் விநாயகர் சிலை பிரதிஷ்டை

தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம் முன்பு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

தென்காசி, செங்கோட்டையில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

இன்று இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சிலைகள் வைப்பதற்கான அனுமதி நீதிமன்றத்தின் மூலமே பெறப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் காவல்துறையினர் கிடுக்குப்பிடி கட்டுப்பாடுகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் தென்காசி மற்றும் செங்கோட்டை பகுதிகளில் இன்று விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வுகள் நடைபெற்றன.

தென்காசியில் கோபுர வாசல், கூலக்கடை பஜார், செண்பக விநாயகர் கோவில், வாய்க்கால் பாலம் ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய அரசு அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத வீதி, எல் ஆர் எஸ் பாளையம், மலையான் தெரு ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்கியது.

இந்த சூழ்நிலையில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யும் பணி நேற்று நடைபெற்றது. காசி விஸ்வநாதர் ஆலயம் முன்பு சிலை அமைக்க காவல்துறையினர் இடையூறு ஏற்படுத்தியதாகவும், இதனால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் விநாயகர் சிலையை இந்த அமைப்புகள் தங்களது கைகளில் தூக்கிக் கொண்டு நடந்து வந்து பிரதிஷ்டை செய்தனர். அப்போது காவல்துறையை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.


விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்ய சுமந்து வந்த போது எடுத்த படம்.

தொடர்ந்து செங்கோட்டை பகுதியில் 37 விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யும் பணிகள் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க, பல்வேறு இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story