தென்காசியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் நூதன ஆர்ப்பாட்டம்

தென்காசியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் நூதன ஆர்ப்பாட்டம்
X

தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் ஒப்பாரி வைத்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை போன்ற அத்தியாவசிய தேவைகளின் விலை வரலாறு காணாத அளவில் ஏறிக்கொண்டே வருகிறது. இதனை கண்டித்து பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து பெண்கள் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஊராட்சி மன்ற துணை தலைவர் உதய கிருஷ்ணன், இளைஞர் காங்கிரஸ் சந்தோஷ், நகர மன்ற உறுப்பினர் முகமது ரபிக் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!