ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவர் மீது புகார்; உறுப்பினரிடம் கருத்து கேட்பு

ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவர் மீது புகார்; உறுப்பினரிடம் கருத்து கேட்பு
X

வட்டாட்சியர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்

ஆவுடையானூர் ஊராட்சி தலைவர் மீதான முறைகேடு புகார் குறித்து ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

ஆவுடையானூர் ஊராட்சி தலைவர் மீதான முறைகேடு புகார் குறித்து ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் கருத்து கேட்பு கூட்டம் தென்காசி வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் குத்தாலிங்கராஜன் (எ) கோபி. இவர்மீது ஊராட்சி மன்ற நிதியை கையாள்வதில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக வந்த புகாரின் பேரில், ஊராட்சி உறுப்பினர்களின் கருத்து அறியும் கூட்டம் தென்காசி வட்டாட்சியர் சுப்பையன் தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உறுப்பினர்களிடம் எழுத்து மூலம் கருத்துக்கள் பெறப்பட்டது .

இது குறித்து தென்காசி வட்டாட்சியரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, மன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் எழுத்து மூலம் பெறப்பட்டது. இவை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் இதற்கான முடிவை மாவட்ட ஆட்சியர் எடுப்பார் என கூறினார்.

இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலிங்க ராஜன் (எ) கோபி அதிமுகவை சேர்ந்தவர் என்பதால் அக்கட்சியைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமையில் ஊராட்சி மன்றம் அருகே குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு திரண்ட அதிமுகவினர்.

பாதுகாப்பு பணியில் தென்காசி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ், ஆலங்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் பர்னபாஸ் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

Next Story