சிறுவர் சீர்திருத்த பள்ளிகளை கள ஆய்வு செய்திட ஆணையம்: வைகோ கோரிக்கை

சிறுவர் சீர்திருத்த பள்ளிகளை கள ஆய்வு செய்திட ஆணையம்:  வைகோ கோரிக்கை
X

வைகோ பைல் படம் 

இந்த வழக்கை சட்டம் ஒழுங்கு காவல் துறையிலிருந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி அபலைப்பெண் பிரியாவுக்கு நீதி வழங்க வேண்டும்

மாநிலம் முழுவதும் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிகளை கள ஆய்வு செய்திட ஆணையம் அமைத்திட வேண்டுமென மதிமுக பொதுச்செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

தாம்பரம் கன்னடபாளையம் குப்பை மேடு பகுதியில் வசித்து வரும் கணவனை இழந்த கைம்பெண் திருமதி பிரியா க/ பெ பழனி இவருக்கு ஆறு குழந்தைகள் உள்ளனர் உறவுகள் இல்லாத ஆதரவற்ற நிலையில் மூத்த மகன் கோகுல் ஸ்ரீ வயது 17 பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார் சொந்த வீடு இல்லாததால் குடிநீர் ஏற்றும் லாரிகளை பார்த்துக்கொள்ளும் வாட்ச்மேன் பணி செய்து கொண்டு அங்கேயே வசித்து வருகிறார்

கணவர் பழனி 2019 ஆம் ஆண்டு இறந்த பின் குடும்ப பாரத்தை தானே சுமந்து மகன் கோகுல் ஸ்ரீ தொடர்ந்து படிக்க வைக்க முடியாத நிலையில் குன்றத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பொம்மை கடையில் வேலைக்கு சேர்த்துள்ளார். இந்நிலையில் கடந்த 29.12.2022 அன்று நண்

பர்களை பார்க்க சென்று விட்டு ரயிலில் தாம்பரம் ரயில் நிலையம் வந்துள்ளார் அப்போது பணியில் இருந்த ரயில்வே காவலர்கள் சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரித்து செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பியுள்ளார்கள்

31 12 2022 மாலை 5 மணியளவில் கோகுல் ஸ்ரீ தாய் பிரியாவிற்க்கு செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து போனில் அழைத்து உன் மகன் பூரி சாப்பிடும் போது வலிப்பு ஏற்பட்டது. அதனால் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனை அழைத்து செல்கிறோம். விரைவில் வர வேண்டுமென தகவல் சொல்லி உள்ளனர். சற்று நேரத்திற்கு பிறகு அதே நபர் உன் மகனை எமர்ஜென்சி வார்டில் சேர்த்துள்ளோம் என்று சொல்லி உள்ளார். பின்னர் அதே நபர் பத்து நிமிடம் இடைவெளியில் உன் மகன் இறந்து விட்டான் என்றும் தெரிவித்துள்ளார்

இரவு 8 மணி அளவில் செங்கல்பட்டு மருத்துவமனை சென்று சிறுவனின் தாய் பிரியா மகனின் உடலை பார்க்க அனுமதிக்காமல், குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலரின் உத்தரவின் பேரில் கட்டாயமாக செங்கல்பட்டில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து அவர் யாரிடமும் பேச விடாமல் செல்போனை பறிமுதல் செய்து வைத்துக் கொண்டனர். மறுநாள் 2023 ஜனவரி 1ஆம் தேதி பகல் ஒரு மணி அளவில் ஆட்டோவில் அழைத்துக் கொண்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனை பிணவறைக்கு அழைத்துச்சென்று அவரது மகன் கோகுல் ஸ்ரீயின் பிரேதத்தைக் காட்டியுள்ளனர். கீழ் உதடு இரண்டாக கிழிந்து உடல் முழுவதும் கொடூர காயங்கள் இருந்துள்ளது. இதைப்பார்த்த பிரியா, தனது மகன் வலிப்பு நோயால் இறக்கவில்லை நீங்கள் சித்திரவதை செய்து அடித்துக் கொலை செய்துள்ளீர்கள் என்று கண்ணீர் விட்டு காதறி அழுதுள்ளார்.

பின்னர் அங்கிருந்து அவரை மீண்டும் வலுக்கட்டாயமாக அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு வீட்டு காவலில் வைத்து 02. 01. 2023 அன்று சீர்திருத்த பள்ளியின் அதிகாரி ஒருவர் வெள்ளைப் பேப்பரில் கையெழுத்து கேட்டு மிரட்டி உள்ளனர். இந்த கொடுமையான சூழலில் சப்தம் போட்டு வீட்டை விட்டு வெளியேறி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவரை நேரில் சந்தித்து விஷயத்தை சொல்லி உள்ளார். அவரும் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

ஜனவரி 3ஆம் தேதி செங்கல்பட்டு முதன்மை குற்றவியல் நீதிபதி முன்பு, மருத்துவர்கள் சிறுவன் கோகுல் ஸ்ரீ உடலை உடற்கூராய்வு செய்துள்ளனர். பின்னர் மேல் கூராய்வுக்கு கிண்டியில் உள்ள கிங் மருத்துவ இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் இரண்டு மருத்துவ அறிக்கையிலும் சிறுவன் கோகுல் ஸ்ரீ கொடூரமாக அடித்து சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தஅறிக்கை கொடுத்த பின் செங்கல்பட்டு நகர காவல் துறை இதை கொலை வழக்காக மாற்றி லாக்கப் சித்ரவதை கொலையில் சம்பந்தப்பட்ட செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளி கண்காணிப்பாளர் மோகன், துணை கண்காணிப்பாளர் நித்தியானந்தம், காவலர்கள் சரண்ராஜ், ஆனந்தராஜ், விஜயகுமா,ர் சந்திரபாபு ஆகிய ஆறு பேரை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். இதில் பாராபட்சமற்ற நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்த தமிழக காவல்துறை பணி பாராட்டுக்குரியது.

இந்த வழக்கை சட்டம் ஒழுங்கு காவல்துறையிலிருந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி, அபலைப் பெண் பிரியா சட்டவிரோதமாக அடைத்து வைத்து வெள்ளைத் தாளில் கையெழுத்து கேட்டு மிரட்டியவர்களின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கணவனை இழந்து ஐந்து பிள்ளைகளுடன் ஆதரவற்ற நிலையில் உள்ள விதவைத் தாய் பிரியாவிற்கு தகுந்த பாதுகாப்பும் அவரின் தகுதிக்கு ஏற்ப அரசு வேலைவாய்ப்பும் நிவாரணமும் வழங்கி வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தரவும், தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிகளை கலாய்வு செய்ய ஆணையம் அமைத்து தகுந்த நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!