தென்காசியில் கல்லூரி மாணவிகள் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

தென்காசியில் மதுவுக்கு எதிராக கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
தென்காசி மாவட்டம் கற்குடி சுற்றுவட்டார கிராமங்களில் குற்றாலம் பகுதி மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், இளையோர் செஞ்சிலுவை சங்கம், தேசிய மாணவர் படை, ஆகியோர் இனைந்து மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.
பேரணியானது கற்குடி, வேம்ப நல்லூர், கட்டளை குடியிருப்பு ஆகிய கிராமங்களில் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. பேரணியில் ஈடுபட்ட மாணவிகள் மதுவுக்கு எதிராக கோஷமிட்டனர், மதுவுக்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனர்.
கிராமப்புறங்களில் அதிகமாக மதுவால் பெண்கள் பாதிப்படைகின்றனர். மதுவினால் ஏற்படும் தீமைகளையும், அதிலிருந்து விடுபடுவது குறித்து கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu