முறையான குடிநீர் வழங்க கோரி நகராட்சி ஆணையாளரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

முறையான குடிநீர் வழங்க கோரி நகராட்சி ஆணையாளரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
X

காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகம் முன்பு திரண்ட பொதுமக்கள்

தென்காசி நகராட்சியில் முறையான குடிநீர் வழங்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. பகுதி மக்களுக்கு நகராட்சி மூலம் குற்றாலம் குடிநீர் திட்டம் மற்றும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது அதிகமான புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் தாமிரபரணியில் இருந்து செயல்படும் ந நீர் ஏற்றும் பகுதியில் மின் மோட்டார் செயலிழந்துள்ளது.

இந்த சூழலில் 23 வது வார்டு பகுதியில் உள்ள முப்புடாதி அம்மன் கோவில் தெருவில் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்குவதாகவும் அதுவும் ஒரு மணி நேரம் மட்டுமே வழங்குவதால் குடிநீர் பிடிப்பதற்குள் நின்று விடுகிறது.

மேலும் அந்த ஒரு மணி நேரத்திலும் மோட்டார் வைத்து உறிஞ்சிக் கொள்கின்றனர். இதனால் அனைத்து பொது மக்களுக்கும் குடிநீர் கிடைப்பதில்லை என்று கூறி காலி குடங்களுடன் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரணை முற்றுகையிட்டனர்.

பின்னர் அவரிடம் சீரான குடிநீர் வழங்க கோரி கோரிக்கை மனு வழங்கினார்கள் தொடர்ந்து நகராட்சி தலைவர் சாதிரை சந்தித்து முறையிட்டனர். பொதுமக்களிடம் நகராட்சி தலைவர் சாதிர் முறையாக அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கிறேன் என உறுதி அளித்தார் அதனை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags

Next Story