வேளாண் சட்டம் ரத்து: சுரண்டையில் காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

வேளாண் சட்டம் ரத்து: சுரண்டையில் காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
X

சுரண்டை நகர காங்கிரஸ் சார்பில் பஸ் நிலையம் முன்பு விவசாயிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

சுரண்டை நகர காங்கிரஸ் சார்பில் பஸ் நிலையம் முன்பு விவசாயிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம் நடந்தது.

கடந்த ஆண்டு மத்திய அரசு அமல்படுத்திய வேளாண்மை சட்டங்கள் வேளாண்மைக்கு எதிரானது எனவும், இதனால் சிறு குறு என அனைத்து தரப்பு விவசாயிகளும் பாதிக்கபபடுவர் எனவே புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்க கோரி நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வந்தனர். இப்பிரச்சனையை காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான ராகுல் காந்தி நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்கள் விளக்க கூட்டங்களில் பேசி வாபஸ் பெற பல கட்ட போராட்டங்களை நடத்தினார்.

இந்நிலையில் புதிய 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் வாங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனை தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக கடுமையான போராட்டங்கள் நடத்தி மத்திய அரசை வாபஸ் பெற வைத்த ராகுல் காந்தியை பாராட்டி அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சுரண்டை நகர காங்கிரஸ் சார்பில் நகர தலைவர் ஜெயபால், தலைமையில் வானவேடிக்கையுடன் பஸ் நிலையம் முன்பு விவசாயிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம் நடந்தது.

இதில் நாட்டாண்மை ராமராஜ், மாவட்ட சேவா தள தலைவர் வள்ளி முருகன், மாவட்ட செயலாளர் ஏகேஎஸ்டி சேர்மசெல்வம், கூட்டுறவு பண்டகசாலை இயக்குனர் சமுத்திரம், டுவின்ஸ் கோபால், முருகேசன், இளைஞர் காங்கிரஸ் அமுதா சந்திரன், தபேந்திரன், ஆட்டோ செல்வராஜ், வர்த்தக காங்கிரஸ் சமுத்திரம், இலக்கிய அணி கந்தையா, சாலமோன், வக்கீல் ரமேஷ், சுக்கிரன், சுரேஷ், டேவிட், ஊடக பிரிவு சிங்கராஜ், பாலகணேஷ் செல்வன், சொரிமுத்து, மகேந்திரன், தர்மராஜ் கோட்டைசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!