தென்காசியில் பி.எஸ்.என்.எல் மாநாடு பற்றி ஊழியர் சங்க பொது செயலாளர் பேட்டி

தென்காசியில் பி.எஸ்.என்.எல் மாநாடு பற்றி ஊழியர் சங்க பொது செயலாளர் பேட்டி
X

பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க பொதுச்செயலாளர் அபிமன்யு பேட்டி அளித்தார்.

தென்காசியில் பி.எஸ்.என்.எல் மாநாடு பற்றி ஊழியர் சங்க பொது செயலாளர் பேட்டி அளித்தார்.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடம் தொழிட்நுட்ப வசதி இருந்தால் எந்த ஒரு கொம்பனாலும் அசைக்க முடியாது, ஆனால் இந்திய அரசு அதற்கு தடையாக இருப்பதாக பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்க பொது செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்கம் சார்பில் இரு தினங்கள் 9வது தமிழ் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தின் பொது செயலாளர் அபிமன்யு கூறுகையில்,

பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்கத்தின் 9வது தமிழ் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் மையமாக பி.எஸ்.என்.எல் நிறுவனம் 4ஜி சேவையை பொதுமக்களுக்கு வழங்க தகுதி இருந்தும் இந்திய அரசு அனுமதி மறுத்து வருகிறது.

எனவே எந்தவித தடையும் இன்றி 4 ஜி சேவையை வழங்க அனுமதிக்க வேண்டும். முறையான தொழில்நுட்பம் இருந்தால் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது, ஆனால் பிரதமர் மோடி தனியார் நிறுவனத்திற்கு துணை நிற்பது போல அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு நிற்பதில்லை. எனவே இந்திய அரசு பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தொழிநுட்பத்தை உயர்த்த முன்வர வேண்டும் என இந்த மாநாட்டின் வாயிலாக வலியுறுத்த உள்ளதாக கூறினார்.

Tags

Next Story