தென்காசியில் மோடி பிறந்த நாள் விழாவை வெடி வெடித்து கொண்டாடிய பாஜக வினர்

தென்காசியில் மோடி பிறந்த நாள் விழாவை வெடி வெடித்து கொண்டாடிய  பாஜக வினர்
X

தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம் முன்பு இனிப்பு வழங்கி மோடி பிறந்த நாள் விழாவை பாஜக வினர் கொண்டாடினர்.

நேற்று பாரத பிரதமரின் பிறந்தநாள் விழா பாஜக சார்பில் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது

பிரதமர் நரேந்திர மோடியின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டது

பாரத பிரதமர் நரேந்திரமோடியின் 75 வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள முக்கியமான அரசியல்வாதிகள் என பல அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தென்காசி மாவட்டத் தலைவர் ராஜேஷ் ராஜா தலைமையில் தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பார்வையாளர் மகாராஜன் மாவட்ட பொதுச் செயலாளர் ராமநாதன் மாவட்ட துணைத்தலைவர்கள் முத்துக்குமார் முத்துலட்சுமி தென்காசி நகர தலைவர் மந்திரமூர்த்திநகர பொதுச்செயலாளர் யோகா சேகர் உள்ளாட்சி மேம்பாடு பிரிவு மாவட்ட தலைவர் கருப்பசாமி சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் ராஜ குலசேகர பாண்டியன் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் விவேக் குமார் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் ராஜ்குமார்,நகர் மன்ற உறுப்பினர்கள் சங்கரசுப்பிரமணியன் ,லக்ஷ்மண பெருமாள் ,நகர துணைத் தலைவர் நாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா