தென்காசியில் தமிழக அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
தென்காசியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா பேசினார்.
BJP News Today - தாய் மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுத நினைக்கும் திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாபெரும் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு மாவட்டத் தலைவர் ராஜேஷ் ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றிய மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா EX எம்பி, தற்போது தமிழகத்தில் ஆளும் திமுக அரசு தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது.
இவர்கள் நடத்தும் எந்த ஒரு பள்ளிகளிலும் தமிழை கட்டாயமாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பல்வேறு மாநிலங்களில் அனைத்து பள்ளிகளிலும் அந்தந்த மாநில மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழக மக்களை ஏமாற்ற நினைக்கும் திமுக அரசு ஏன் தமிழகத்தில் இயங்கும் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் மொழியை கட்டாய மொழியாக்க வில்லை.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கை மூலம் அனைத்து மாநிலங்களிலும் அந்த மாநில மொழியை கட்டாயமாக படிக்க வேண்டும். ஐந்தாம் வகுப்புக்கு மேல் விருப்ப மொழியாக தாங்கள் விருப்பப்படும் ஏதேனும் ஒரு மொழியை கற்றுக் கொள்ளலாம். என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய கல்விக் கொள்கை திட்டம் கஸ்தூரி ரங்கன் கமிட்டி போன்ற பல்வேறு கமிட்டிகள் பல்வேறு மாநிலங்கள் சென்று ஆய்வு மேற்கொண்டு அவர்கள் கொடுத்த பரிந்துரையில் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தால் திமுக அரசு நடத்தும் அவர்களது குடும்பத்திற்கு சொந்தமான பள்ளிகளில் பாதிப்பு ஏற்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில வர்த்தக அணி தலைவரும் தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பார்வையாளருமான ராஜா கண்ணன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாலகுருநாதன், அருள்செல்வன், ராமநாதன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் மருது பாண்டியன் தொழில் பிரிவு மாநில செயலாளர் மகாதேவன் மாநில செயற்குழு உறுப்பினர்கள் அன்புராஜ், சாரதா பாலகிருஷ்ணன், ராம ராஜா பாண்டித்துரை, மாவட்ட துணைத் தலைவர்கள் முத்துக்குமார், பால்ராஜ், பாலமுருகன், முத்துலட்சுமி, பால ஸ்ரீனிவாசன், மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், ராஜலட்சுமி, ஜானகி, புலிக்குட்டி, அர்ஜுனன், தென்காசி நகரத் தலைவர் மந்திரமூர்த்தி, வழக்கறிஞர் பிரிவு வெங்கடேசன் ,உள்ளிட்ட மாநில மாவட்ட அணி பிரிவு மண்டல் கிளை கமிட்டி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu