பாவூர்சத்திரம் ரயில்நிலையத்திற்கு பிறந்தநாள் : கேக் வெட்டி கொண்டாடிய பொதுமக்கள்..!

பாவூர்சத்திரம் ரயில் நிலையம் முன்பு சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடிய போது எடுத்த படம்
பாவூர்சத்திரம் ரயில் நிலையம் தொடங்கப்பட்டு 122 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக ரயில் பயணிகள் அரசியல் கட்சி பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் இணைந்து கேக் வெட்டி ரயில் நிலையத்தின் பிறந்த நாளாக உற்சாகமாக கொண்டாடினர்.
தென்காசி மாவட்டத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக கருதப்படுவது பாவூர்சத்திரம் ரயில் நிலையம் ஆகும். வெள்ளையர்கள் ஆட்சிக்காலத்தில் 1903 ஆம் ஆண்டு பாவூர்சத்திரம் ரயில் நிலையம் முதல் முதலாக நிறுவப்பட்டது. நீராவி மற்றும் நிலக்கரியால் இயக்கப்பட்டு வந்த ரயில்கள் பின்பு டீசல் இன்ஜினாக இயக்கப்பட்டு வந்தது.
பாவூர்சத்திரத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகள் அண்டை மாநிலமான கேரளாவிற்கு கொண்டு செல்வதற்கு இந்த ரயில் நிலையத்தையே முன்பிருந்த விவசாயிகள் பயன்படுத்தி வந்த நிலையில் தற்பொழுது அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு மின்சாரத்தில் இயங்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்புதான் இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட்டதாகவும் பாவூர்சத்திரம் ரயில் நிலையத்திற்கு வரலாறு உண்டு.
122 வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடும் வகையில் ரயில் எஞ்சின் போன்ற வடியிலான கேக்கை தயார் செய்து அதனை தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் மாவட்ட மற்றும் ஒன்றியகவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள்சமூக ஆர்வலர்கள் ரயில் பயணிகள் பள்ளி மாணவர்கள் உட்பட பலர் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினர். பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தின் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு ரயில் நிலையம் முழுவதும் வண்ண வண்ண சீரியல் பல்புகளால் அலங்கரிக்கப்பட்டு காண்போரை மெய்சிலிர்க்கும் வகையில் காட்சியளித்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu