தென்காசி மற்றும் மதுரை வழியாக காசிக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

கோப்புப்படம்
இந்தியாவில் உள்ள பண்பாட்டு, கலாச்சார மையங்களை சுற்றிப் பார்க்க "பாரத் கௌரவ்" என்ற சுற்றுலா ரயிலை இந்திய ரயில்வே இயக்கி வருகிறது.
வருகிற மே மாதம் திருவனந்தபுரம் கொச்சுவேலியில் இருந்து காசிக்கு "பாரத் கௌரவ்" சுற்றுலா ரயில் இயக்க ஏற்பாடு செய்துள்ளது.
மே 4 அன்று திருவனந்தபுரம் கொச்சுவேலியில் இருந்து புறப்படும் இந்த சுற்றுலா ரயில் கொல்லம், செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், மதுரை வழியாக சென்று மே 6 அன்று ஒடிசா மாநிலம் பூரி சென்று சேரும்.
- பூரியில் ஜெகநாதர் கோவில் மற்றும் கொனார்க் சூரிய கோவில் தரிசனம். மே 8 அன்று கொல்கத்தாவில் காளி கோவில் தரிசனம்.
- மே 9 அன்று பால்குனி நதியில் நீராடி முன்னோர் பித்ரு பூஜைக்கு பிறகு மகா போதி கோவில் தரிசனம்.
- மே 10 அன்று கங்கையில் நீராடி காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி கோவில்கள் தரிசனம்.
- மே 11 அன்று அயோத்தியா சரயு நதியில் நீராடி ராமஜென்ம பூமி மற்றும் அனுமன் கோவில்கள் தரிசனம்.
- மே 12 அன்று பிரக்யா ராஜ் திரிவேணி சங்கமத்தில் நீராடி அனுமன் கோவில் தரிசனம் .
- மே 14 அன்று சுற்றுலா ரயில் கொச்சுவேலி வந்து சேரும்.
இந்த ரயிலில் 4 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் மற்றும் ஒரு உணவு தயாரிக்கும் பெட்டி ஆகியவை இணைக்கப்படுகிறது.
இந்த சுற்றுலா ரயிலுக்கான பயண சீட்டுகள் பதிவு செய்ய இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழக அலுவலர்களை 8287931977 & 8287932122 என்ற அலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu