தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பாலாலயம்
தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலய பூஜை நடைபெற்றது.
தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாத சுவாமி கோவிலின் 180 அடி உயரம் கொண்ட இராஜகோபுர திருப்பணிக்காக பாலாலயம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் உட்பட பக்தர்கள் பங்கேற்றனர்.
தென்காசி மாவட்டத்தில் தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாத சுவாமி கோவில். 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் காசி விஸ்வநாத சுவாமி, உலகம் மன், பாலசுப்பிரமணியசுவாமி சன்னதிகள் அமைந்துள்ளது. இதே போன்று 180 அடி உயரம் கொண்ட 9 கலசங்களுடன் கூடிய இராஜ கோபுரமும் இக்கோவிலில் அமைந்துள்ளது.
இராஜகோபுரத்திற்கு கடந்த 17.03.2006ல் கும்பாபிஷேகம் நடந்த நிலையில் தற்போது இராஜகோபுரத்திற்கு திருப்பணிகள் நடைபெற இருப்பதால் ராஜகோபுரத்திற்கு காசி விஸ்வநாதசுவாமி சன்னதி முன்பாக பாலாலய பூஜை நடத்தப்பட்டது.
முன்னதாக நேற்று யாகசாலை பூஜைக்காக புண்ணியாக வாசகம், பஞ்சகவியம், தனபூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோபூஜை, மகா தீபாராதனைகள் நடத்தப்பட்டது. இரவு முதல் காலை யாகசாலை பூஜை இதனை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
பின்னர் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நிகழ்ச்சியும் கோபுர வரை படத்திற்கு புனித கும்ப நீரால் பாலாலயம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் உதயகிருஷ்ணன், கோவில் செயல் அலுவலர் முருகன், மணியம் மூர்த்தி உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu