தென்காசியில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா: பதக்கங்கள் வழங்கி கௌரவிப்பு

தென்காசியில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா: பதக்கங்கள் வழங்கி கௌரவிப்பு
X

தென்காசியில் ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு நல்லாசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

தென்காசியில் நல்லாசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் விருதுகளை வழங்கினார்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தர ராஜ் தலைமை தாங்கினார். தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் நல்லாசிரியர்களுக்கு வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீர், தென்காசி மாவட்டக் கல்வி அலுவலர் கோகிலா, சங்கரன்கோவில் மாவட்டக் கல்வி அலுவலர் இராமசுப்பு, தென்காசி மாவட்ட வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story