பிசி, எம்பிசி, டிஎன்சி கல்வி உதவிதொகை பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்
மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் (பைல் படம்).
தென்காசி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் மாணவ, மாணவியர் கல்வி உதவிதொகை பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில், அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் மாணவ மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர் மரபினர் மாணவ மாணவியருக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ மாணவியர்களுக்கான கல்வி உதவித் தொகை இணையதளம் (Scholarship Portal) புதுப்பித்தலுக்கு 10.11.2022 முதல் செயல்பட துவங்கும். புதுப்பித்தலுக்கான (Renewal) விண்ணப்பங்கள் 06.12.2022-க்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதே போல் புதிய இனங்களுக்கு (Fresh) இணையதளம் 15.12.2022 முதல் செயல்படத் துவங்கும். புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் 20.01.2023-க்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அரசு இணையதளம் https://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship schemes-யிலும் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளது. மேலும் விவரங்களுக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
மாடுகளுக்கு பெரியம்மை நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெறலாம்: ஆட்சியர் தகவல்:
மாடுகளுக்கு பெரியம்மை நோய் என்பது ஈ, கொசு போன்ற இரத்தம் உறிஞ்சும் பூச்சிகள் மூலம் பரவக்கூடிய வைரஸ் நோய் ஆகும்.பாதிக்கப்பட்ட மாடுகளில் காய்ச்சல் உடல் முழுவதும் சிறிய கட்டிகள், கால்களில் வீக்கம் போன்ற அறிகுறிகள் காணப்படும். உன்னி கொசு போன்ற கடிக்கும் ஈக்கள் மூலமாக பாதிக்கப்பட்ட மாடுகளில் இருந்தும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து புதிதாக வாங்கி வரப்படும் மாடுகள் மூலமாக நல்ல நிலையில் இருக்கும் மாடுகளும் பாதிப்படைகிறது. நோயற்ற மாடுகள் கடுமையான காய்ச்சல் உடல் சோர்வு தீவனம் உண்ணாமை கண்ணில் நீர் வடிதல் உடலில் அனைத்து பகுதிகளிலும் கொப்புளங்கள் மற்றும் கட்டிகள் போன்ற அறிகுறிகள் காணப்படும்.
கன்றுகளில் நோயின் வீரியம் அதிகமாக காணப்படும். கறவை மாடுகளில் மடி மற்றும் காம்புகளில் வலி மற்றும் வீக்கம் ஏற்பட்டு சில சமயம் மடி நோயாக மாறும்.கறவை மாடுகளின் பால் உற்பத்தி குறையும் இது போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu