குற்றாலத்தில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் கூட்டம்
குற்றாலத்தில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
நில மதிப்பீட்டு கட்டண உயர்வால் பொதுமக்களுக்கு பாதிப்பு என ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தலைவர் பேட்டியளித்தார்
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு திருநெல்வேலி மண்டல 2ம் ஆண்டு பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் தென்காசி மாவட்டம் குற்றாலம் தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி மண்டல பொறுப்பாளரும் செயற்குழு உறுப்பினருமான முத்துராமன் தலைமை வகித்தார். முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், தொழிலதிபர் சுந்தரமகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருநெல்வேலி மண்டல ஒருங்கிணைப்பாளர் இசக்கி முத்து வரவேற்புரையாற்றினார். தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார், டாக்டர் முத்துராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் பங்கேற்ற அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனரும் தேசிய தலைவருமான ஹென்றி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறியதாவது:-
தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி உள்ள பகுதியாக அமைந்துள்ளது. மலைப்பகுதியை ஒட்டி உள்ள இடங்கள் காகாஸ் கமிட்டியில் உள்ளதால் அப்பகுதியில் உள்ள நிலங்களில் கட்டிடங்கள் கட்டுவதற்கு பொது மக்களுக்கு மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு தொழிற்சாலைகளுக்கு பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுகிறது. எனவே அரசு இதனை ஆராய்ந்து காக்காஸ் கமிட்டியிலிருந்து விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுபோல் தமிழக அரசு சமீபத்தில் நில மதிப்பீட்டு கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளது குறிப்பாக பல இடங்களில் வெளி மார்க்கெட் விலை சென்ட் ஒன்றிற்கு இரண்டு லட்சம் மதிப்பீடு இருந்தால் அரசு மதிப்பீட்டில் 4 லட்சம் அல்லது ஐந்து லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பத்திர பதிவு செய்யும் நபர்களுக்கு மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது எனவே அரசு நில மதிப்பீட்டு கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.மேலும் மலைப்பகுதிகளுக்கு தனியாக விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சாமித்துரை, கிங்ஸ்லி ஜெபசிங், முகம்மது சுல்தான், முகைதீன் அப்துல் காதர், அண்ணாதுரை, சண்முகசுந்தரம், மாரியப்பன், துரைமுத்து, அபுபக்கர்சித்திக், பாஸ்கர், சார்லஸ்சந்தனசாமி, மகேஷ் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சியின் முடிவில் திருநெல்வேலி மண்டல சட்ட ஆலோசகரும், செயற்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் சுந்தரபாண்டியராஜா நன்றியுரையாற்றினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu