தென்காசியில் ஏ.ஐ.சி.சி.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட மாநாடு

தென்காசியில் ஏ.ஐ.சி.சி.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட மாநாடு நடைபெற்றது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
தென்காசியில் ஏ.ஐ.சி.சி.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட மாநாடு
X

தென்காசியில் ஏ ஐ சி சி டி யு மாவட்ட மாநாடு நடைபெற்றது.

மத்திய அரசு அறிவித்த திருநெல்வேலி- சங்கரன்கோவில் ரயில்வே பாதையை ஆலங்குளம்- சுரண்டை வழியாக செயல்படுத்திட வேண்டும் என தென்காசியில் நடைபெற்ற ஏ.ஐ.சி.சி.டி.யு. மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தென்காசியில் ஏ.ஐ.சி.சி.டி.யு. மாவட்ட முதல் மாநாடு நடைபெற்றது.சங்கத்தின் மூத்த தலைவா் முருகையா கொடியேற்றினாா். மாவட்ட நிா்வாகிகள் அயுப்கான், புதியவன், பேச்சிமுத்து, பொட்டுச்செல்வம், அழகையா, சுப்பிரமணியன்,பரமேஸ்வரி தலைமை வகித்தனா்.

ஏ.ஐ.சி.சி.டி.யு. மாநில பொதுச் செயலாளர் ஞானதேசிகன் மாநாட்டை தொடங்கிவைத்தாா். மாவட்ட பொதுசெயலாளர் எம். வேல்முருகன் வேலை அறிக்கையை சமா்ப்பித்தாா். பொருளாளா் எஸ் குருசாமி வரவு -செலவு அறிக்கையை சமா்ப்பித்தாா்.மாநில தலைவா் சங்கர பாண்டியன் நிறைவுரையாற்றினாா்.

தென்காசி மாவட்டத்தில் கனிம வளம் கொள்ளை போவதைத் தடுக்க வேண்டும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கனிம வள குவாரிகளை தடை செய்ய வேண்டும், தென்காசி மாவட்டத்தின் கிராம ஊராட்சிகளில் 100 நாள் திட்ட தொழிலாளா்களுக்கு 3 மாத நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும்,தென்காசியிலிருந்து பெங்களூருவிற்கும்,கோயம்புத்தூருக்கும் விரைவு ரயில்கள் இயக்க வேண்டும், மத்திய அரசு அறிவித்த திருநெல்வேலி- சங்கரன்கோவில் ரயில்வே பாதையை ஆலங்குளம்- சுரண்டை வழியாக செயல்படுத்திட வேண்டும்,திருநெல்வேலி தென்காசி நான்குவழிச் சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும், தேவையான பகுதிகளில் ரயில்வே மேம்பாலம் அமைத்திட வேண்டும் என்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விருதுநகா் மாவட்ட மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி பொறுப்பாளா் ஆவூடையப்பன், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளா் முருகன் ஆகியோா் கலந்துகொண்டனா். மாதவன் வரவேற்றாா்.பேச்சிமுத்து நன்றி கூறினாா்.

Updated On: 3 Oct 2023 3:01 PM GMT

Related News