தென்காசியில் 75 வது சுதந்திர தின அமுத பெருவிழா கண்காட்சி

தென்காசியில் 75 வது சுதந்திர தின அமுத பெருவிழா கண்காட்சி
X

சுதந்திர தின அமுத பெருவிழாவையாெட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தென்காசியில் 75 வது சுதந்திர தின விழா சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா காவல்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தென்காசியில் 75 வது சுதந்திர தின விழா சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா மற்றும் கண்காட்சி ஈஸ்வரன் பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த கண்காட்சியை காவல் துறையினர் தலைமையேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் அறிவுறுத்தலின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு காவல் துறையினர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக குறும்படங்கள் மூலமாகவும், பாடல்கள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளின் நடனம், நாடகம், பேச்சுப்போட்டி, கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடத்தி பரிசு வழங்கி பாராட்டினர். இந்நிகழ்ச்சியானது காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவு ஏற்படுத்தும் விதமாக அமைந்ததாக அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!