தென்காசி மாவட்டத்தில் இன்று 73 -வது குடியரசு தின விழா கொண்டாட்டம்

தென்காசி மாவட்டத்தில் இன்று 73 -வது குடியரசு தின விழா கொண்டாட்டம்
X

தென்காசியில் நடந்த குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தரராஜ் தேசிய கொடியேற்றினார்.

தென்காசி மாவட்டத்தில் இன்று 73 -வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் இன்று கொண்டாடப்பட்ட 73 வது குடியரசு தின விழா ஐ.சி.ஐ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கோலாகலமாக நடந்தது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் கோபாலசுந்தரராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவலர்களின் அணிவகுப்பு மறியாதையை ஏற்றுக் கொண்டார்.

மேலும் காவலர்கள், மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள், உள்ளிட்ட 81 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கி பராட்டியதுடன் மூவர்ண பலூன்களையும் சமாதானப் புறாவை பறக்க விட்டார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!