கேரளாவிற்கு கடத்த முயன்ற 18 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவிற்கு கடத்த முயன்ற 18 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்.

சுமார் 18 டன் ரேசன் அரிசியை கடத்த முயன்ற வாகனத்தை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக கேரள மாநிலத்திற்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பால் , காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு செல்லும் வாகனங்களில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்களை மறைத்து வைத்து கடத்தப்படும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு மாவட்ட எல்லைப் பகுதிகளில் சோதனை நடை பெற்று வருகிறது.

இந்நிலையில், குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலானாய்வு துறையினருக்கு, பாவூர்சத்திரத்தில் இருந்து கேரளாவுக்கு சட்டவிரோதமாக ரேசன் அரிசி கடத்துவதாக வந்த தகவலை அடுத்து கிடைத்த ஆசாத்நகர் பகுதியில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையில் ஆசாத்நகர் பகுதியில் வந்த கனரக லாரியை பிடித்து சோதனை செய்த போது அதில் இருந்த ஓட்டுனர் தப்பி ஓடிய நிலையில் காவல் துறையினர் வாகனத்தை சோதனை செய்ததில் அதில் கேரளாவிற்கு சட்ட விரோதமாக சுமார் 18 டன் ரேஷன் அரிசி 375 சாக்கு மூட்டைகளில் இருந்ததை கண்டு குற்றாலம் காவல் நிலையத்திற்கு லாரியை எடுத்துச் சென்றனர். அங்கு லாரியை ஆய்வு செய்த போது இறைச்சி கழிவு மூடைகளுக்கு அடியில் ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து தப்பிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story