தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது, குட்கா விற்பனை: 119 பேர் கைது

தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது, குட்கா விற்பனை: 119 பேர் கைது
X

சித்தரிப்பு காட்சி

மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் அதிரடி சோதனை. சட்டவிரோதமாக மது மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபட்ட 119 நபர்கள் கைது.

மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் அதிரடி சோதனை. சட்டவிரோதமாக மது பாட்டில்கள் மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபட்ட 119 நபர்கள் கைது

தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு உத்தரவின் பேரில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் அறிவுறுத்தலின் பேரிலும் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள், போதை பொருட்கள், கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஐந்து நாட்கள் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டதில் விற்பனைக்காக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த 27 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 182 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த 92 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 6649 பாக்கெட் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் வாசுதேவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த துரைமுருகன் (33) என்ற நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 1.100 கிலோ கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பாக ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!