தென்காசி அம்மா உணவகத்திற்கு - காங்கிரஸ் எம்எல்ஏ உணவு வழங்க நிதி உதவி.

தென்காசி அம்மா உணவகத்திற்கு - காங்கிரஸ் எம்எல்ஏ உணவு வழங்க நிதி உதவி.
X

தமிழகத்தில் கொரோணா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அறிவித்தது.

ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகம் முழுமையாக செயல்படும் என்று அரசு தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் கவனத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் நன்கொடையாளர்கள் பலர் இலவசமாக உணவு வழங்க நிதி அளித்து வருகின்றனர்.

தென்காசி அரசு மருத்துவமனை அருகே புதிய பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் அம்மா உணவகத்திற்கு 19.05.௨௦௨௧ முதல் 31.05.2021 வரை இலவசமாக உணவு வழங்க தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் தனது சொந்த பணத்தில் இருந்து ரூ. 82,830 பணத்தை காசோலையாக தென்காசி நகராட்சி ஆணையாளர் பாரிஜானிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி நகர தலைவர் காதர் முகைதீன்,மாவட்ட இளைஞரணி பொது செயலாளர்சுப்பையா,தென்காசி இளைஞரணி தலைவர் சந்தோஷ்,,செங்கை கண்ணன்வட்டார தலைவர் பெருமாள் கண்ணன்,சுப்ரமணியன், ஆறுமுகம், திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஆயா நடராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story