டெங்கு தடுப்புக்கு ஒத்துழைக்காவிடில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

டெங்கு தடுப்புக்கு ஒத்துழைக்காவிடில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
X

தென்காசி மாவட்டம் சுரண்டையில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காவிட்டால் வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் சுரண்டையில் மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆலோசனையின் பேரில் சுரண்டை பேரூராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சுரண்டை பேரூராட்சி நிர்வாக அதிகாரி வெங்கட கோபு மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கீர்த்திகா தலைமையில். மஸ்தூர் பணியாளர்கள் அனைத்து வார்டுகளிலும் வீடு வீடாக சென்று, லார்வா கொசு வளரும் இடங்களை கண்டுபிடித்து அழிப்பது, டெங்கு நோய் தாக்கியவர்களுக்கு மருத்துவ உதவி பெற ஆலோசனைகள் வழங்கியும், வாறுகால்களை சுத்தம் செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாக அதிகாரி வெங்கட கோபு, டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், பொதுமக்கள் தங்களின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும், டெங்கு தடுப்பு ஊழியர்கள் வீடுகளுக்கு வந்து ஆய்வு மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காவிட்டால் வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என தெரிவித்தார்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு