சாலை விபத்துகளை தடுக்க புது முயற்சி

சாலை விபத்துகளை தடுக்க புது முயற்சி
X

தென்காசி மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுப்பதற்கு மற்றொரு புது முயற்சியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விபத்துகளை தவிர்க்க தமிழகத்தில் புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் தென்காசி மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுப்பதற்கு புது முயற்சியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இந்த செயலியில் விபத்து நிகழ்ந்த இடத்தில் புகைப்படம், கூகுள் மேப் லோகேசன், விபத்திற்கான காரணம் போன்ற பல்வேறு தகவல்களை பெற்றுக் கொள்வதுடன் அதனை, விபத்திற்கு சம்பந்தப்பட்ட அனைத்து துறையினருக்கும் அனுப்பப்பட்டு மீண்டும் அதே இடத்தில் விபத்துக்கள் நடைபெறாதபடி ஏற்பாடுகள் செய்யப்படுவதே இந்த செயலியின் அம்சமாகும்.இதற்கான விளக்க கூட்டத்தில் தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து காவல்நிலையத்தில் இருந்தும் மொத்தம் 60 காவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai healthcare technology