மருத்துவ முடிதிருத்தும் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

மருத்துவ முடிதிருத்தும் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
X

இன்று தமிழகம் முழுவதும் மருத்துவ முடிதிருத்துவோர் தொழிலாளர் நல சங்கம் சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென்காசியில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் பண்டார சிவன் சிறப்புரையாற்றினார். மாநில அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. கல்வி, வேலைவாய்ப்புகளில் 5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும், சமூகத்திற்கு சட்ட பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் இருந்து திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் தென்காசி நகர துணைத் தலைவர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Tags

Next Story