தென்காசியில் கயிறு உற்பத்தி வணிக மையம்

தென்காசியில் கயிறு உற்பத்தி வணிக மையம்
X
தென்காசி அருகே மத்தியரசின் மானியத்துடன் கூடிய ரூ.3.5 கோடியில் அமைக்கப்பட்ட கயிறு உற்பத்தி வணிக மையத்தை மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கானொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தென்காசி மாவட்டத்தில் விவசாயத் தொழிலுக்கு அடுத்தபடியாக தென்னை மூலம் கிடைக்கக் கூடிய கூந்தலை பயன்படுத்தி கயிறு உற்பத்தி செய்யும் 60க்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் இயங்கி வருகிறது. ஆனால் தென்னை நாரை பயன்படுத்தி பல்வேறு தொழில்நுட்பங்களை செய்வதற்குரிய இயந்திரங்களை பயன்படுத்த முடியாத சூழல் இருந்து வந்தது.

இக்குறையை போக்குகின்ற வகையிலும் பண்டை தொழில்நுட்பத்தை பாதுகாக்கின்ற வகையிலும் மத்தியரசின் கீழ் இயங்கும் கதர் தொழில் ஆணையம் மற்றும் கயிர்தொழில் வாரியம் இணைந்து மத்திய அரசின் சுருதி திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கயிறு வணிக தொழிற்கூடத்தை ரூ.3.5 கோடி நிதியில் அமைக்கப்பட்டது. இதில் குழுமம் ரூ.77.30 லட்சம் நிதியும், மத்திய அரசு ரூ.2.70 கோடி மானியத்துடன் கூடிய நிதியும் வழங்கியுள்ளது.

இதேபோன்று இந்தியாவில் 51 கயிறு வணிக தொழிற்கூடம் அமைக்கப்பட்டு, தமிழகத்தில் 15 கயிறு வணிக தொழிற்கூடமும், அதில் ஒன்று தென்காசியிலும் அமைக்கப்பட்டது. மத்திய அமைச்சர் நிதியின் கட்கரி இன்று கானொலி காட்சி மூலம் அதை திறந்து வைத்தார்.

இந்த கயிறு தொழிற்கூடத்தில் தேங்காய் கூந்தல் உரிமையாளர்கள் தங்களது தேங்காய் சவரியை கொண்டு வந்து கயிறு மற்றும் வெளிநாடுகளில் மாடி தோட்டத்திற்கு பயன்படுத்தப்படும் கூந்தல் கட்டிகள் என பல்வேறு பொருட்களை கட்டண அடிப்படையில் இந்த தொழிற்கூடத்தில் உற்பத்தி செய்து கொள்ள முடியும்.

மேலும் இந்த தொழிலுக்குரிய 3 மாத பயிற்சிகளும் ஸ்டைபண்ட் மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் 3 மாதங்களுக்கு அளிக்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ள கயிறு வணிக தொழிற்கூடத்தின் மூலம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடதக்கது.

Tags

Next Story