சிஎஸ்ஐ தேர்தல்: புதுச்சுரண்டை சேகரத்தில் டிஎஸ் அணி வெற்றி

சிஎஸ்ஐ தேர்தல்: புதுச்சுரண்டை சேகரத்தில் டிஎஸ் அணி  வெற்றி
X

சிஎஸ்ஐ திருநெல்வேலி திருமண்டல நிர்வாகிகள் தேர்தல் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வு பெற்ற நீதிபதிகள் பால் வசந்த குமார் மற்றும் ஜோதிமணி ஆகியோரால் நடத்தப்பட்டு வருகிறது. பிரதம பேராயரின் ஆணையாளர் திருச்சி பேராயர் சந்திரசேகரன், மற்றும் தேர்தல் அலுவலர்கள் ஓய்வுபெற்ற நீதிபதி ரத்தினராஜ், ஏடிஎஸ்பி ஜெயசந்திரன் ஆகியோர் தேர்தலை நடத்தினர். இதில் வடக்கு சேகர மன்றம் புதுச்சுரண்டை சேகரத்தில் தேர்தல் அலுவலராக ரெவ‌ டிகே ஸ்டீபன், தேர்தல் பார்வையாளராக வக்கீல் விக்டர் ஆகியோர் பணியாற்றினர். இதில் டிஎஸ் அணி சார்பில் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பொறுப்புக்கு போட்டியிட்ட அன்னப்பிரகாசம் மற்றும் விக்டர் ராஜகுமார் ஆகியோர் 235 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றனர்.

சேகர மன்ற உறுப்பினர் பொறுப்புக்கு பாலச்சந்திரன், தினகரன். ஜேக்கப்.ஜேம்ஸ் அழகுராஜா. ஜெயசந்திரன. பி.பால்ராஜ். எஸ்‌ பால்ராஜ். ஸ்டீபன் ஜெபராஜா. சுதர்சிங் ராஜதுரை. டென்சிங் வைத்தியராஜன். தனபால் ராஜசேகர் ஆகியோர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களை சேகர சபை மக்கள் வாழ்த்தினர்.

Tags

Next Story
ai future project