தென்காசியில் காப்பீடு கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் காப்பீடு கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X

தென்காசியில் மத்தியஅரசை கண்டித்து காப்பீடு கழக ஊழியர்கள் மதிய உணவு இடைவேளை இன்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இன்று இந்தியா முழுவதும் மத்திய அரசை கண்டித்து காப்பீடு கழக ஊழியர்கள் மதிய உணவு இடைவேளை இன்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென்காசியில் உள்ள காப்பீடு கழக அலுவலகம் முன்பு காப்பீட்டு கழக ஊழியர் சங்க தலைவர் பேச்சிமுத்து தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மத்திய அரசின் பட்ஜெட்டில் காப்பீடு கழக பங்குகள் மற்றும் பொதுத்துறை பங்குகள் விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்தியதை கண்டித்தும், மின்சார வாரியம், விமான துறைகளை தனியார் மயமாக்குவதை கண்டித்தும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காப்பீட்டுக் கழக ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்