சசிகலாவை முதல்வராக்க வேண்டும்- தென்காசியில் தீர்மானம்

சசிகலாவை முதல்வராக்க வேண்டும்- தென்காசியில் தீர்மானம்
X

வரும் சட்டமன்ற தேர்தலில் சசிகலாவை தமிழக முதல்வர் ஆக்க வேண்டும் என்று சின்னம்மா பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு தியாகத் தலைவி சின்னம்மா பேரவை தென்காசி மாவட்ட ஆலோசனை கூட்டம் அதன் தலைவர்.காகனம் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறையிலிருந்து வெளியே வரும் சசிகலாவை வரவேற்கும் விதமாக வால்போஸ்டர்கள் அடித்தும், பேனர்கள் வைத்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், வெடி வெடித்தும் மிக சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்க தீர்மானிக்கப்பட்டது.சசிகலாவை தமிழக முதல்வராக ஆக கடுமையாக உழைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் ராஜேஷ், மாநிலச் செயலாளர் லதாலோகநாதன், மாநில பொருளாளர் ஷேக், தென்காசி மாவட்ட செயலாளர் லட்சுமணன், மாவட்ட சட்ட ஆலோசகர் முத்துராமலிங்கம், தென்காசி நகர செயலாளர். ரமேஷ், தென்காசி நகர துணை செயலாளர் கணேசன் உள்ளிட்ட மாவட்ட மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!