குற்றால அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி

குற்றால அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி
X

குற்றாலம் அருவிகளில் குளிக்க இன்று முதல் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, ஆற்றங்கரைகளில் வசித்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர். மேலும் ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி உள்ளிட்ட குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வெள்ளப் பெருக்கு குறைந்துள்ளதால், சுமார் 6 நாட்களுக்கு பின்னர் அருவிகளில் குளிக்க சுற்றுலாபயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!