ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் சங்கத்தின் தென்காசி மாவட்ட கூட்டம்

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் சங்கத்தின் தென்காசி மாவட்ட கூட்டம்
X

தென்காசியில் நடந்த தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் சங்க கூட்டத்தில் மாநில  தலைவர் அருள்ஜோஸ் பேசினார்.

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் சங்கத்தின் தென்காசி மாவட்ட கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் சங்கத்தின் தென்காசி மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் சங்கம் திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டு தமிழக முழுவதும் கிளைகளை நிறுவி வருகிறது. இந்த புதிய சங்கத்தில் தென்காசி மாவட்டம் இணைந்துள்ளது. இதனை தொடர்ந்து தென்காசி மாவட்டத்தின் முதலாவது பொதுக்குழு கூட்டம் குற்றாலம் சேனைத்தலைவர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் முகமது ஜலீல் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மாநில தலைவர் அருள் ஜோஸ், மாநில பொதுச் செயலாளர் இருதயராசன், மாநில துணைத்தலைவர் ஜோசப் செல்வராஜ், நெல்லை மாவட்ட தலைவர் முத்து முகமது ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள்.

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்திலிருந்து பிரிந்து புதிய சங்கம் துவங்கப்பட்டதற்கான காரணங்களை விளக்கி மாநில தலைவர் அருள்ஜோஸ் பேசினார். பொதுக்குழு உறுப்பினர்கள் புதிய சங்கத்தில் இணைந்ததை ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மாவட்ட துணை தலைவர் சூரிய நாராயண மூர்த்தி வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் பிரம்ம நாயகம் செயலாளர் அறிக்கையையும், மாவட்ட பொருளாளர் சின்னசாமி நிதி அறிக்கையையும் சமர்ப்பித்து ஒப்புதல் பெற்றனர்.

இந்த கூட்டத்தில் 80 வயது ஓய்வூதியர்கள் சுப்பையா, ராஜேந்திரன் உள்ளிட்ட ஐந்து உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டனர். மருத்துவ செலவு தொகையை திரும்ப பெறுவதில் உள்ள இடையூறுகளை நீக்கவும் குடும்ப பாதுகாப்பு நிதியை உயர்த்தவும் முதியோர்களுக்கு ரயில்வே பயணத்தில் ஏற்கனவே இருந்த சலுகையை மீண்டும் வழங்கவும் கிராம முன்சீப் கிராம உதவியாளர்களின் 1-6 1995க்கு முன் உள்ள பனிக்காலத்தை ஓய்வூதியத்தில் சேர்க்கவும். கொரோனா காலத்தில் தன் உயிர் பாராது உழைத்த மருத்துவர்கள், செவிலியர்களின் பணியை நிரந்தரமாக்கவும், சத்துணவு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுதல் என்பது உள்பட 19 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் ஐயப்பன் நன்றி கூறினார்.

Tags

Next Story
கேன்சர் இருக்கவங்க கண்டிப்பா இத சாப்டுங்க!..அவ்ளோ நன்மைகள் இருக்கு இந்த கோவக்காய்ல..