சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்து வாலிபர் தற்கொலை: போலீசார் விசாரணை

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்து வாலிபர் தற்கொலை: போலீசார் விசாரணை
X

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்து வாலிபர் தற்கொலை தீயணைப்புத்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சங்கரன்கோவில் அருகே பாலகிருஷ்ணன்(45) என்பவர் கிணற்றில் விழுந்து தற்கொலை தீயணைப்புத்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள உசிலங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் பாலகிருஷ்ணன்(45). இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளது. இதில் ஒரு பெண்ணுக்கு திருமணம் முடிந்த நிலையில் இரண்டு வருடத்திற்கு முன்பு பாலகிருஷ்ணன் மனைவி இறந்துவிடவே இரண்டு வருடங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மனமுடைந்த பாலகிருஷ்ணன் அவருடைய கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டு சடலமாக மிதந்துள்ளார் உடனடியாக பாலகிருஷ்ணன் உறவினர்கள் சங்கரன்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story