கூலி உயர்வு கேட்டு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கூலி உயர்வு கேட்டு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள், கூலி உயர்வு மற்றும் விடுப்பு சம்பள கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் உதவி அலுவலர்கள் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் புளியங்குடி சுற்று வட்டார பகுதிகளில் வீடு சார்ந்த விசை தொழிலாளர்கள், நெசவாளர்கள் என 12,000 க்கும் மேற்பட்ட விசை தொழிலாளர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தங்கள் நீண்ட நாள் கோரிக்கைகளான 50 சதவீத கூலி உயர்வு, விடுப்பு சம்பளம் 450 ரூபாய் வழங்கிட கோரி புளியங்குடி சாலையில் அமைந்துள்ள தொழிலாளர் துறை தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகம் முன்பு 100 க்கும் மேற்பட்டவர்கள் தங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும், உதவி ஆய்வாளர் தமிழ்செல்வியை மாற்ற வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்