திமுக ஆட்சியை யார் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது: ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு

திமுக ஆட்சியை யார் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது: ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு
X

சங்கரன்கோவிலில் திமுக கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து இறுதி கட்ட தேர்தல் பிரச்சாராத்தில் மா.கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.

திமுக ஆட்சியை யார் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. சங்கரன்கோவிலில் மா.கம்யூனிஸ்ட் முன்னாள் மாநில செயலாளர் பேச்சு.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழநிச்சாமி அரசியல் சாசன சட்டத்தை கொஞ்சம் படிங்க நீங்க இல்ல உங்க தாத்தா வந்தாலும் திமுக ஆட்சியை ஒன்றும் செய்ய முடியாது என சங்கரன்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் பேசினார்.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுவதையொட்டி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் திமுக கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து இறுதி கட்ட தேர்தல் பிரச்சாராத்தில் வருவாய்துறை அமைச்சர் கே.கேஎஸ்எஸ். ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர், மதிமுக உள்ளிட்ட தோழமை கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏரளமான தொண்டர்கள் கலந்து கொணடனர். பின்னர் தேர்தல் பரப்புரையை கோவில் வாசல் முன்பு நிறைவு செய்தனர்.

அப்போது பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஒரு எச்சரிக்கை செய்துள்ளார். 2024ம் ஆண்டு பிரதமர் மோடி ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று அறிவித்து இங்கே திமுக ஆட்சியை கலைத்து விட்டு தேர்தல் நடத்துவார் என ஒரு கூட்டத்தில் பேசியுள்ளார்.

எடப்பாடிக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை. நான் அவரை கேட்டுக்கொள்ள விரும்புகிறேன் அரசியல் சட்டத்தை படித்துள்ளீர்களா, ஒரு மாநிலத்தில் தேர்தல் நடந்து ஆட்சிக்கு வந்தால் ஐந்தாண்டுக்கு அந்த ஆட்சி தொடரும். அப்படி என்றால் 2024ம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது என்றால் உத்திரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது தான் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அங்கெல்லாம் ஆட்சியை கலைத்து விடுவார்களா எனவே எடப்பாடி அரசியல் சாசன சட்டத்தை படியுங்கள் நீங்க இல்ல உங்க தாத்தா வந்தாலும் திமுக ஆட்சியை ஒன்றும் செய்ய முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இறுதி கட்ட தேர்தல் பரப்புரையில் பேசினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!