தென்காசி மாவட்டத்தில் 24 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: மாவட்ட ஆட்சியர் வழங்கல்

நடுவக்குறிச்சி மைனர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் 24.62லட்சம் செலவில் 67 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கான மானியத்துடன் கூடிய விவசாயக் கருவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சங்கரன்கோவில் அருகே உள்ள நடுவக்குறிச்சி மைனர் கிராமத்தில் உள்ள சூரங்குடியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவிகளை தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் வழங்கி பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு. பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அனைத்துத்தரப்பு மக்களையும் பயன்பெறச் செய்து வருகிறார்கள். பொதுமக்களின் கோரிக்கைகளையும், உதவிகளையும் பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கும் பொருட்டு, ஒவ்வொரு அரசின் நலத்திட்ட மாதமும் ஒரு வருவாய் வட்டத்தினை தேர்ந்தெடுத்து, அதிலுள்ள கடைக்கோடி கிராமத்திற்கு சென்று. பொதுமக்களின் கோரிக்கைகளைப் பெற்று. தகுதியுடைய பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கென மனுநீதி நாள் முகாம் நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில், சங்கரன்கோவில் வட்டம், நடுவன்குறிச்சி மைனர் ஊராட்சிக்குள்பட்ட சூரங்குடியில் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதில் 24.62 லட்சம் செலவிலான நலத்திட்ட உதவிகளை 67 பயனாளிகளுக்கும் விவசாயிகளுக்கான டிராக்டர் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்கான உபகரணங்கள் மற்றும் முதியோர் உதவித்தொகை, பட்டா வழங்குதல், விதவைகள் உதவித்தொகை உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், கிராமப்புறத்தில் குழந்தை திருமணம், பள்ளி செல்லா குழந்தைகள் அதிகம் உள்ளதை கண்டறிந்து இந்த கிராமத்தை தேர்வு செய்துள்ளோம் கிராமத்தில் வசிக்கின்ற பொதுமக்களின் வீடுகளுக்கு, அலுவலர்கள் குழுவாகச் சென்று பொதுமக்களின் கோரிக்கைகளைப் பெற்று தகுதியான நபர்களுக்கு அதன் பயன்களை கிடைக்கப்பெறச் செய்யும் வகையிலும், அனைத்து அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையிலும் இம்முகாம் நடத்தப்படுகிறது.
தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து, துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் இம்மனுநீதி நாள் முகாமின் மூலம் விரிவாக எடுத்துரைத்துள்ளனர். இதனை பொதுமக்கள் கருத்தில் கொண்டு, அத்திட்டங்கள் மூலம் பயன் பெற்று. தங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் துரைரவிச்சந்திரன்
முன்னதாக நடுவக்குறிச்சி மைனர் ஊராட்சி தலைவர் முனைவர் சிவ ஆனந்த் தலைமையில் மாவட்ட ஆட்சியருக்கு பரிவட்டம் கட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu