சங்கரன்கோவில்: நெசவு தொழிலாளிக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆறுதல்

சங்கரன்கோவில்: நெசவு தொழிலாளிக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆறுதல்
X

சங்கரன் கோவிலில் தி.மு.க.வினரால் தாக்கப்பட்ட நெசவு தொழிலாளிக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி ஆறுதல் கூறினார்.

சங்கரன்கோவிலில் தி.மு.க. வினரால் தாக்கப்பட்ட நெசவு தொழிலாளிக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி ஆறுதல் கூறினார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ராஜாவின் தீவிர ஆதரவாளரான ஜெயக்குமார் என்பவரால் நெசவுத் தொழிலாளி நடராஜன் தாக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனை அறிந்த முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ராஜலட்சுமி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நெசவுத் தொழிலாளி நடராஜனை சந்தித்து நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார். பின்னர் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும் தி.மு.க.வினரின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச வேண்டாம் எனவும் அ.தி.மு.க. எப்போதும் உங்களுக்கு துணை நிற்கும் என்றும் தெரிவித்துக் கொண்டார்.. இதில் அ.தி.மு.க. முன்னாள் நகர்மன்றத் தலைவர் கண்ணன் என்ற ராஜு, நகரச் செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!