மக்களுக்காக எப்போதும் குரல் காெடுப்பாேம்: கனிமாெழி எம்பி பேச்சு

மக்களுக்காக எப்போதும் குரல் காெடுப்பாேம்: கனிமாெழி எம்பி பேச்சு
X

கோவில்பட்டியில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி பிரச்சாரம் செய்தார்.

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக குரல் கொடுப்போம். கோவில்பட்டியில் கனிமொழி எம்பி பேச்சு.

மக்களுடைய கோரிக்கைகளை ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக குரல் கொடுக்கக் கூடியவர்கள் என கோவில்பட்டியில் கனிமொழி எம்பி பேச்சு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் 36 வார்டுகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கோவில்பட்டி புதுகிராமம் பகுதியில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி பிரச்சாரம் செய்தார். தமிழக சமூக நலத்துறை மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கீதா ஜீவன், நகரச் செயலாளர் கருணாநிதி ஒன்றிய செயலாளர் முருகேசன் மாவட்ட துணைச்செயலாளர் ஏஞ்சலா யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ் பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ் பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ராஜகுரு துணை அமைப்பாளர் சேதுரத்தினம் பரமசிவம் தவமணி மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் துணை அமைப்பாளர் சந்தானம் இலக்கிய சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் இளைஞரணி அமைப்பாளர் மகேந்திரன் அவைத் தலைவர் முனியசாமி மாவட்ட பிரதிநிதி மாரிச்சாமி நகர பொருளாளர் ராமமூர்த்தி வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளர்கள் ராமச்சந்திரன் நாகராஜ் செல்லப்பா முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மாரீஸ்வரன் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் திருப்பதி ராஜா நகர தலைவர் பாண்டியன் மதிமுக இளைஞர் அணி செயலாளர் விநாயக ரமேஷ் மதிமுக மாவட்டச் செயலாளர் ரமேஷ் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் காமராஜ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பிரச்சாரத்தில் எம்பி கனிமொழி பேசுகையில்:- இது மகளிருக்கான ஆட்சி மகளிருக்கு முதலிடம் தரக்கூடிய ஆட்சி அதனால் தான் திமுக ஆட்சிக்கு வந்ததும் நகர்ப்புற மற்றும் டவுன் பஸ்களில் பெண்களுக்கு கட்டணம் கிடையாது என அறிவித்து அதை செயல்படுத்தி கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர் பெண்களுக்கு அரசு பணிகளில் 40 சதவீத இட ஒதுக்கீடு அறிவித்து அதை செயல்படுத்தி கொண்டிருப்பது திமுக ஆட்சி

கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை எதையாவது நிறைவேற்றி இருக்கிறார்களா இல்லை செல்போன் கொடுப்போம் என்றார் கொடுக்கவில்லை. அனைத்து இடங்களில் wifi வசதி செய்து தரப்படும் என கூறினார்கள் கொடுக்கவில்லை. சிலிண்டர் விலையை குறைக்க வேண்டியது மத்திய பாஜக அரசு தான். அவர்கள் பின்னாடி வருவார்கள் அவர்களிடம் கண்டிப்பாக நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டும் இருந்தாலும் தமிழக முதல்வர் இதுகுறித்து மத்திய அரசிடம் கடிதம் எழுதியுள்ளார். விரைவில் சிலிண்டர் விலையை குறைக்கக் கூடிய இடத்திற்கு நாம் விரைவில் வருவோம் இரண்டாண்டுகளில் தேர்தல் வருகிறது அந்த இடத்திற்கு நாம் வருவோம்.

தமிழகத்தில் முதல் முறையாக ஒரு எழுத்தாளருக்கு (கி. ராஜநாராயணன்) மரியாதை வழங்கப்பட்டது திமுக ஆட்சியில் தான் அதுவும் அவருக்கு சிலை வைத்து மணிமண்டபமும் அமைக்க ஏற்பாடு செய்தது திமுக ஆட்சியில் தான். மக்களுடைய கோரிக்கைகளை ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக குரல் கொடுக்கக் கூடியவர்கள் போராடக் கூடியவர்கள் திமுக என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!