சங்கரன்கோவில் அருகே வயல்களில் கழிவுகள் கொட்டி தீ வைப்பு

கேரளாவில் இருந்துலாரிகளில் கொண்டு வந்து கழிவுகளை கொட்டி தீ வைத்து விட்டுச் சென்றுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்

சங்கரன்கோவில் அருகே வயல்களில் கொட்டப்பட்ட கேரள மாநில கழிவுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள குத்தாலப்பேரி கிராமம். இக்கிராமங்களில் பெரும்பாலான மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். கிராமத்து வயல் வெளிகளில் கடந்த ஒரு ஆண்டாக கேரளாவிலிருந்து லாரிகளில் மருத்துவக்கழிவுகள், எலெக்ட்ரானிக்ஸ் கழிவுகள், பாலிதீன் பைகள் உள்ளிட்டவைகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது. பின்னர் தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதிகளில் புகை மூட்டம் ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை . இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களாக கேரளாவில் இருந்து கழிவு லாரிகளில் கொண்டு வந்து கொட்டி தீ வைத்துவிட்டுச் சென்றுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால் பெரும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது.

Tags

Next Story
ai healthcare products