சங்கரன்கோவில் அருகே கூலி தொழிலாளி அடித்து கொலை: போலீசார் விசாரணை
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை.
சங்கரன்கோவில் அருகே டீ வாங்கி கொடுத்து அழைத்து சென்று விவசாயி சண்முகையா(60) என்பவரை அவரது உறவினரே அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆயாள்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சண்முகையா(60). இவரது உறவினர் பெரியதுரை. இவர் மது, கஞ்சா பாேன்ற பாேதை பழக்கங்களுக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை ஆயாள்பட்டி கிராமத்தில் உள்ள தேநீர் கடையில் சண்முகையாவிற்கு டீ வாங்கி கொடுத்து விட்டு, பின்னர் அவரை அருகே உள்ள விவசாய தோட்டத்திற்கு அழைத்து சென்ற பெரியதுரை, சண்முகையாவை அருகில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து அடித்து கொலை செய்து விட்டு பனவடலிசத்திரம் காவல்நிலையத்தில் சரணடந்தார்.
விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்த விவசாயி சண்முகையாவின் குடும்பத்திற்கு தகவல் கொடுத்தனர். இதணைதொடர்ந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி பனவடலிசத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu